இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

மாணவி சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தது தெரியவந்தது. மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
Published on

சேலம்:

சேலம் இரும்பாலையை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்த போது அவர் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடினர்.

விசாரணையில், அந்த மாணவி சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்திய போது தலைவாசலை அடுத்த வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (19) என்பவர் மாணவியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com