திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் எடை மேடை அருகே நேற்று திருவள்ளூர் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடித்தார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 1.15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் திருநின்றவூர் கன்னிகாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்று தெரிந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சா பறிமுதல் செய்தனர். அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com