நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் தகராறு செய்ததால் இளம்பெண் தற்கொலை

கோவை ரத்தனபுரி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் தகராறில் ஈடுபட்டதால் மனவேதனை அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை ரத்தனபுரி அருகே உள்ள செக்கான் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஸ்ரீ வித்யா (வயது 32). பழ வியாபாரி. கடந்த சில நாட்களாக இவர் யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இது ஸ்ரீவித்யாவின் கணவருக்கு அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் 2 பேருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஸ்ரீ வித்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீ வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com