தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு கணவர் அனுப்பாததால் இளம்பெண் தற்கொலை

விவேக் தினசரி மது குடித்து விட்டு வந்து சரண்யாவின் குடும்பத்தினரை பற்றி தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட சரண்யாவை விவேக் தடுத்து கண்டித்தார்.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு கணவர் அனுப்பாததால் இளம்பெண் தற்கொலை
Published on

போரூர்:

சென்னை வடபழனி அழகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரண்யா (வயது27).

இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவேக் மனைவி சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சரண்யாவுக்கு அவரது உறவினரான விவேக்குடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மேலும் விவேக் தினசரி மது குடித்து விட்டு வந்து சரண்யாவின் குடும்பத்தினரை பற்றி தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட சரண்யாவை விவேக் தடுத்து கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சரண்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

திருமணம் முடிந்து ஒரு ஆண்டே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com