சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை- உறவினர் வெறிச்செயல்

நெல்லையில் சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் பிரியா (வயது24).

இவர்களது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பசுபதி என்ற பாண்டி. இவர் அடிக்கடி ஜெகநாதன் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரியா மட்டும் இன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு பசுபதி வந்தார். பின்னர் அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பசுபதி அங்கிருந்த சுத்தியலால் பிரியா தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் பசுபதி அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பசுபதி எதற்காக பிரியாவை கொலை செய்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com