பொன்னேரி அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
பொன்னேரி அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை
Published on

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் ஹரிணி (18). இவர் திருநெல்வேலி ஜியான் செமினேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பி.டெக் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் அவரது பெற்றோர் பொன்னேரி பஜாருக்கு சென்று வருவதாக கூறி சென்றனர். இந்த நிலையில் அவர்கள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது ஹரிணியை காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com