ஆபாசமாக படம் பிடித்து வாலிபர் மிரட்டுகிறார்- நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் புகார்

இளம்பெண்ணும் ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர்.பல பேரை மோசடி செய்தும், பல பெண்களை ஏமாற்றியும் வருகிறார். வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆபாசமாக படம் பிடித்து வாலிபர் மிரட்டுகிறார்- நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் புகார்
Published on

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும், ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தோம். பல இடங்களுக்கும் நாங்கள் சென்றுள்ளோம்.

மேலும் அவர் என்னோடு தனிமையில் இருந்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது எனக்கு தெரியாமல் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால் திருமணம் ஆகவில்லை என மறுக்கிறார். என்னை திருமணம் செய்து கொள்ளவும் மறுக்கிறார்.

என்னை அவர் பலமுறை அவரது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும் என்னை திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் ரூ.2 லட்சம் வாங்கி உள்ளார்.

அதனை திருப்பி கேட்ட போது அவரது உறவினர் ஒருவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். என்னை போல் பல பேரை மோசடி செய்தும், பல பெண்களை ஏமாற்றியும் வருகிறார். எனவே அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com