கைது
உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- யோகா ஆசிரியர் கைது
மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த யோகா ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனியை சேர்ந்த யோகா ஆசிரியரான சந்தானம் (57) என்பவர் பள்ளிக்கு வந்து மாணவிகளுக்கு யோகா கற்றுக் கொடுத்தார்.
அப்போது மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், குழந்தைகள் நல வாரியத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து குழந்தைகள் நல வாரிய குழு உறுப்பினர் லலிதா வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தியபோது யோகா ஆசிரியர் சந்தானம், பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது.
இதைதொடர்ந்து, சந்தானத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

