

ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோடு, எம்.சி. ரோடு பகுதியில் ஏராளமான ஜவுளி கடைகள் உள்ளன. கடைக்கு வெளியே நிற்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை தங்களது கடைக்கு வருமாறு அழைப்பது வழக்கம். இதில் ஜவுளி கடை ஊழியர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் தமீம்அன்சாரி என்பவரது கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் ஊழியரான ஆசீம் என்பவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த காட்சி கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.