கடையநல்லூரில் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தொழிலாளி தற்கொலை

சில மாதங்களுக்கு முன்பு மகேசுக்கு, செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
கடையநல்லூரில் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தொழிலாளி தற்கொலை
Published on

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47). இவர் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடையநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மாலை கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரத்திற்கு சென்ற மகேஷ் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளார். அப்போது அந்த வழியாக செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை விரைவு ரெயில் ஏறி இறங்கியதில் மகேஷ் தலையும், உடலும் துண்டானது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று மகேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில் கள்ளக்காதல் விவகாரத்தில் மகேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு மகேசுக்கு, செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் 2 பேரின் வீட்டில் இருந்த உறவினர்களுக்கும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை உறவினர்களுக்கும் தெரியவந்ததால், சமீபத்தில் 2 பேரும் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து செங்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் இருவரையும் கண்டித்து, அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மகேஷ் தனது மனைவியின் ஊரான வேலாயுதபுரத்தில் வசித்து வந்த நிலையில் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கள்ளக்காதலியை பிரிந்த ஏக்கத்தில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com