நன்னிலம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நன்னிலம் அருகே மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதால் மனஉளைச்சலில் இருந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விஷம்
விஷம்
Published on

நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள ஆனைகுப்பம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சசிகாந்த் (வயது 47), இவரது தனது மனைவி சண்முகப்பிரியா (40).

6 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகாந்த் வி‌ஷம் குடித்து, வயல்வெளியில் மயங்கிக் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகாந்த் இறந்தார்.

தகவலறிந்த நன்னிலம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com