வீட்டில் மனைவி கொடுத்த பிரியாணி சூடாக இல்லாததால் தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனவேதனையில் இருந்த கார்த்திக் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
வீட்டில் மனைவி கொடுத்த பிரியாணி சூடாக இல்லாததால் தொழிலாளி தற்கொலை
Published on

திருநின்றவூர்:

ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திக்(வயது47). கொத்தனார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு மதுபோதையில் கார்த்திக் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி பிரியாணி சமைத்து வைத்து இருந்தார். அதனை கணவருக்கு கொடுத்த போது சூடாக இல்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், பிரியாணி சூடாக இல்லை எனக்கூறி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் வீட்டில் தூங்க சென்று விட்டனர்.

இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனவேதனையில் இருந்த கார்த்திக் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com