திருப்பூர் அருகே கல்லால் தாக்கி பனியன் நிறுவன தொழிலாளி படுகொலை

பனியன் நிறுவன தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சேகாம்பாளையம் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது முகம் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. இதனால் மர்மநபர்கள் கல்லால் தாக்கி அந்த வாலிபரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான வாலிபரின் ஊர், பெயர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் என்பதும், பல்லடம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது

அவரை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். பனியன் நிறுவன தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com