குமாரபாளையம் அருகே 15 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த தொழிலாளி சிறையில் அடைப்பு

சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருச்செங்கோடு:

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் புகழேந்திரன் (23). இவர் கடந்த 1 1/2 ஆண்டாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மன்னா வீதியில் தங்கி கட்டிடம் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாயார் சரஸ்வதியுடன் வசித்து வருகிறார். புகழேந்திரனின் உறவினரின் 15 வயது மகள் ஊட்டியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறுமியின் தாயார் குமாரபாளையம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி குமாரபாளையம் அழைத்து வந்து புகழேந்திரன் கட்டாய திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதற்கு சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை செய்து புகழேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com