அரசு ஆஸ்பத்திரிக்கு கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி

ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அரசு ஆஸ்பத்திரிக்கு கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி
Published on

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள காவனூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 38 ). தொழிலாளி.

இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது கையில் கடித்தது.

கண்ணாடிவிரியன் பாம்பு அவரை கடித்தது தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.

மேலும் கண்ணாடிவிரியன் பாம்பையும் பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு கதிரவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com