ஆரணியில் பைக்கில் சென்ற தம்பதியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பைக்கில் சென்ற தம்பதியிடம் 5 பவுன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணகிரி, நகை செய்யும் தொழிலாளி.

இவரது மனைவி மகாலட்சுமி இவர்கள் இருவரும் நேற்று இரவு பைக்கில் ‌ஷராப் பஜார் தெருவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கில் தலைகவசம் அணியிருந்த வந்த 2 கொள்ளையர்கள் தம்பதியினரை பின்தொடர்ந்து உள்ளனர். இதனையடுத்து மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர்.

மேலும் தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com