ஆண்டிபட்டி அருகே விபத்தில் பெண்ணின் கை துண்டானது

வேனில் கையை வெளியே வைத்தபடி வந்ததால் வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக பிரியாவின் கையில் உரசியது.உடனடியாக அருகில் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆண்டிபட்டி அருகே விபத்தில் பெண்ணின் கை துண்டானது
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா (வயது 30). இவர் கண்டமனூர் அருகே உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வந்தார்.

பின்னர் மீண்டும் தனது ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வேனில் கையை வெளியே வைத்தபடி வந்ததால் அந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக பிரியாவின் கையில் உரசியது.

இதில் அவரது வலது கை துண்டாகி கீழே விழுந்தது. இதனால் அவர் வலியில் அலறி துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை பிடித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசேஷத்துக்கு சென்ற போது நடந்த விபத்தில் பெண்ணின் கை துண்டானது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com