கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் மனைவி தற்கொலை

பிரசாந்த் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் தனக்கு பழக்கமான பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார்.பிரசாந்த் மீது பவானியின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர்.
கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் மனைவி தற்கொலை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது30). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவானி(24). இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பிரசாந்த்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். மேலும் அந்த பெண்ணுடன் பிரசாந்த் தனியாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பவானி கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதில் மனவேதனை அடைந்த பவானி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

பிரசாந்த் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் தனக்கு பழக்கமான பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார். மேலும் 3 மாதமாக அவர் வீட்டுக்கும் வரவில்லை என்று தெரிகிறது. இந்த மனவேதனையில் பவானி தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே பிரசாந்த் மீது பவானியின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com