பெரியபாளையம் அருகே கணவரை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி கைது

பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது.கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார்.
பெரியபாளையம் அருகே கணவரை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி கைது
Published on

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 30). குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் கடந்த 11-ந்தேதி மர்மமான முறையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது. இதனால் ரமேஷ் மனைவி தங்கலட்சுமி (27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரை பிடித்து போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார். ஆத்திரம் அடைந்து தனது கணவரை முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசார் தங்கலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் தங்கலட்சுமியை போலீசார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com