

சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விஜய விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
விழாவில் வியாழக்கிழமை (3-ந்தேதி) அன்று காலை 8 மணிக்கு இறைவனின் அனுமதி வாங்குதல், விநாயகர் வழிபாடு, இறைவனிடத்தில் கோரிக்கை வைத்தல், கணபதிபூஜை, வருணபூஜை, விநாயகர் திருக்குடங்களுக்கு பூஜை, விநாயகர் வேள்வி, நவகோள் வேள்வி, திருமகள் வேள்வி, பசு பூஜை, அஸ்த்திர வேள்வி, யாகசாலை பூஜை நிறைவு, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
காலை 10 மணிக்கு விஜய விநாயகர் மூர்த்திக்கு திரு மருந்து சாற்றுதல், மாலை 6 மணிக்கு முதல் கால வேள்வி ஆரம்பம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல்.
4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல், 2-ம் கால வேள்வி, யாகசாலை பூஜை நிறைவு. காலை 9.30 மணிக்கு யாத்ராதானம் கடம்புறப்பாடு.
காலை 9.45 மணிக்கு விமான குடமுழுக்கு நன்நீராட்டு, விமான தீபாராதனை. காலை 10 மணிக்கு விஜய விநாயகருக்கு குடமுழுக்கு நன்நீராட்டு விழா, அலங்காரம், அர்ச்சனை தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும்.
இவ்விழாவில் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.