

சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு வருகிற மே 5-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது. தமிழக வணிகர் விடியல் மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாட்டையொட்டி ஆலோசிக்க சென்னை மண்டல பொதுக்குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் தலைமை தாங்குகிறார்கள். மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல் வரவேற்கிறார்.
பொதுக்குழுவில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றுகிறார். பொதுச்செயலாளர் கோவிந்த ராஜுலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமை செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தித்தொடர்பாளர் பாண்டியராஜன்,
மாவட்ட தலைவர்கள் த.ராமச்சந்திரன், என்.ஜெயபால், எட்வர்டு ஆதிகுருசாமி, வில்லியம்ஸ் மற்றும் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்கள் பங்கேற்கிறார்கள். முடிவில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஷேக் முகைதீன் நன்றி கூறுகிறார்.