

மொரப்பூர்:
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் வகுரப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஓலைப்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் கழிவுநீர் வெளியே செல்வதற்கு ஏதுவாக கால்வாய் அமைக்கப்பட்டு இணைப்பு கால்வாய் இல்லாமல் இருந்தது. இதனால் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே கழிவுநீர் கால்வாயை மயானம் வரை நீட்டிப்பு செய்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஓலைப்பட்டி மயானம் வரை புதிய கழிவுநீர் கால்வாய் நீட்டிப்பு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் முனிராஜ், துணைத்தலைவர் மூர்த்தி, ஊராட்சி செயலாளர் மாதேசன் மற்றும் சரவணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.