நாமக்கல்லில் வாகனம் மோதி தாய், மகள் பலி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
நாமக்கல்லில் வாகனம் மோதி தாய், மகள் பலி
Published on

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள சின்னஅய்யம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (50). இவரது மகள் கீர்த்தனா அனுஸ்ரீ(10). இருவரும் நேற்று நாமக்கல்-திருச்செங்கோடு ரோடு பெரசபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி கீர்த்தனா அனுஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பேரில், நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com