உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து- 20 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து
விபத்து
Published on

திருநாவலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலிகிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவர் தனது மகள் வழி பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்கள் 30 பேருடன் ஒரு வேனில் கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் கிராமத்துக்கு சென்று விழாவில் கலந்துகொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் சிப்காட் அருகே வந்தபோது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலி பகுதியை சேர்ந்த ஏழுமலை 42, ஆறுமுகம் 52, வீரம்மாள் 35, சுசீலா 35, மல்லிகா 40, செல்வி 30, சீதாலட்சுமி 70, தெய்வானை 27, உஷா 34, கொளஞ்சி 50, முருகவேல் 47, கொளஞ்சிநாதன் 50, பரிமளா 33 உள்ளிட்ட 20 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com