தேனி அருகே மில் வேன் மீது கல்லூரி பஸ் மோதியதில் 18 பேர் படுகாயம்

தேனி அருகே இன்று தனியார் மில் வேன் மீது கல்லூரி பஸ் மோதியதில் 18 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து
விபத்து
Published on

தேனி:

தேனியில் இருந்து போடி நோக்கி தனியார் மில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. மாரியம்மன் கோவில்பட்டி பிரிவு அருகே வேன் நின்று கொண்டிருந்தது. அப்போது தேனி நோக்கி வந்த தனியார் கல்லூரி வாகனம் அதன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மில் வேனுக்குள் இருந்தவர்கள் அலறியடித்து கூச்சலிட்டனர். இதில் 2 வாகனங்களின் முன் பகுதியும் பெருமளவு சேதமடைந்தது. இந்த விபத்தில் மில் வேனில் வந்த சித்ரா (40), ஜோதி (42), சண்முக வள்ளி (41), புவனேஸ்வரி (27), நந்தினி (28), மணிமாலா (34), மணிகண்டன் (23), வசந்தி (36), மலர்கொடி (38), நிரோஷா (25), கயல்விழி (39), சுபா (14), சந்திரகலா (28) உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கல்லூரி பஸ் சேதமடைந்ததால் மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மாணவிகள் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து அறிந்ததும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் அங்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com