பண பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனை தீவிரம்

ஊத்துக்கோட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை
வாகன சோதனை
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா என்று சோதனை செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரியும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆன ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்லப்படுகிறதா என்று சோதனை செய்ய பள்ளிப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாபர் சாதிக் தலைமையில் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் கோபி, தலைமை காவலர் சரவணன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com