வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் முதியவர் சுப்பிரமணி வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
Published on

திருவள்ளூர்:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்காவாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மூலம் ஒரு மகனும், 2-வது மனைவி மூலம் ஒரு மகனும் உள்ளனர்.

சுப்பிரமணி 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு வீட்டின் வெளியே சென்ற போது சுப்பிரமணி தவறி விழுந்து இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் முதியவர் சுப்பிரமணி வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து 2வது மனைவியின் மகன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவத்தன்று இரவு சுப்பிரமணிக்கும், 2-வது மனைவி மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com