

சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி, ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சி தலைவர் பதவி, திண்டிவனம், பெரியகுளம், ராணிப்பேட்டை ஆகிய நகராட்சிகளில் துணை தலைவர் பதவி மற்றும் பேரூராட்சியில் 3 தலைவர் பதவிகளும், 7 துணைத் தலைவர் பதவிகளும் வழங்கப்பட்டன.
நேற்று தேர்தல் நடந்த போது விடுதலை சிறுத்தை கவுன்சிலர்களுக்கு எதிராக தி.மு.க.வினர் போட்டியிட்டதால் பிரச்சினை ஏற்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார்.
இதேபோல பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர், பெரியகுளம் நகராட்சி தலைவர், திருப்போரூர் பேரூராட்சி துணைத் தலைவர், வேப்பத்தூர், அனுமந்தம்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் தி.மு.க.வினர் போட்டியிட்டு பதவிகளை கைப்பற்றி உள்ளனர்.
காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஒரு சில இடங்களில் தி.மு.க. வினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.