சென்னை விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் கைது

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டில் சில மாதங்கள் தங்கி இருந்துவிட்டு, பின்பு சாா்ஜா வழியாக இந்தியா வந்துள்ள 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஆலந்தூர்:

சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சஜன்(50), காஞ்சீபுரம் மாவட்டத்தை சோ்ந்த சூசை ராஜா(52) ஆகியோர் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டில் சில மாதங்கள் தங்கி இருந்துவிட்டு, பின்பு சாா்ஜா வழியாக இந்தியா வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் கியூ பிரிவு மற்றும் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

X

Maalai Malar
www.maalaimalar.com