சுந்தரப்பெருமாள்கோவில் அருகே சாலை விபத்தில் டிரைவர் உட்பட 2 பேர் பலி

சுந்தரப்பெருமாள்கோவில் அருகே சாலை விபத்தில் டிரைவர் உட்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுந்தரப்பெருமாள் கோவில் பகுதி கும்பகோணம்-தஞ்சை மெயின் ரோட்டில் பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் வந்த டாட்டா ஏசி வாகனத்தை வளையபேட்டை மாங்குடியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 25) ஓட்டி வந்துள்ளார். அதில் கும்பகோணம் செம்ப்பேடைசேர்ந்த சுந்தரம் மகன் மணிகண்டன் என்பவர் வந்துள்ளார்

கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற வேன் டாட்டா ஏசி ஆட்டோவில் மோதியதால் சம்பவ இடத்திலேயே டிரைவர் ரமேஷ் உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் செல்லும்போது வழியிலேயே இறந்தார்.

சுவாமிமலை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் சென்று வழக்கு பதிவு செய்து தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com