திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ் சிவராசு
திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ் சிவராசு
Published on

திருச்சி:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.

இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும் என்றும், பள்ளி, கல்லூரிக்கு தேர்வுகள் நடந்தால் இது பொருந்தாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்ட வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com