செவ்வாப்பேட்டையில் ரெயில் மோதி கல்லூரி மாணவி பலி: பிறந்தநாளில் இறந்த சோகம்

வீட்டின் அருகே உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர செவ்வாப்பேட்டை ரெயில்வே கேட்டை ரேகா கடக்க முயன்றார்.திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செவ்வாப்பேட்டையில் ரெயில் மோதி கல்லூரி மாணவி பலி: பிறந்தநாளில் இறந்த சோகம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் நேற்று மதியம் இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பலியானவர் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா (வயது22) என்பது தெரிய வந்தது.

இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். ரேகாவுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அவர் வீட்டின் அருகே உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர செவ்வாப்பேட்டை ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியே வந்த விரைவு ரெயில் மோதி ரேகா பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com