ஊத்துக்கோட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.விபத்து குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். மாம்பழ வியாபாரி. இவரது மனைவி நிர்மலா (வயது 33). கேசவன் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து உள்ளார். நேற்று மாலை அவர் அங்கிருந்து மாம்பழங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார். டிராக்டரை கேசவன் ஓட்டினார். அவரது மனைவி நிர்மலா அருகில் அமர்ந்து இருந்தார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.

இதில் நிலை தடுமாறிய நிர்மலா டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா இறந்தார்.

இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com