மகனை கல்லூரி படிப்பிற்காக சேர்த்து விட்டு வீடு திரும்பிய தந்தை டிராக்டர் மோதி பலி

மகனை கல்லூரியில் படிக்க வைக்க சென்றபோது பரிதாபமாக தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனை கல்லூரி படிப்பிற்காக சேர்த்து விட்டு வீடு திரும்பிய தந்தை டிராக்டர் மோதி பலி
Published on

பொன்னேரி:

ஆரணி அடுத்த பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவரது மகன் தனசேகரன். இருவரும் இருசக்கர வாகனத்தில் பொன்னேரி எல்.என்.ஜி. கல்லூரிக்கு சென்று தனசேகரனை கல்லூரியில் சேர்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குன்னமஞ்சேரி அருகில் வரும்போது ஏலியம்பேட்டில் இருந்து பொன்னேரி வந்து கொண்டிருந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பாஸ்கர் தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். லேசான காயத்துடன் தனசேகரன் தப்பினார். அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்சில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதித்தபோது வரும் வழியில் பாஸ்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். மகனை கல்லூரியில் படிக்க வைக்க சென்றபோது பரிதாபமாக தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com