தண்டையார்பேட்டையில் 3,500 ஆட்டோக்களில் சாலை பாதுகாப்பு ஸ்டிக்கர்

தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், டோல்கேட் பகுதிகளில் 3.500 ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அயனாவரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆட்டோவில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி
அயனாவரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆட்டோவில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி
Published on

ராயபுரம்:

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பொன்னுரங்கம் முன்னிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆட்டோக்களில் ஒட்டும் பணி நடைபெற்றது.

சீட் பெல்ட் அணிவது, தலைக்கவசம் அணிவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாமல் இருப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஆட்டோக்களின் பின்புறம் ஓட்டப்பட்டு வருகிறது. தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், டோல்கேட் பகுதிகளில் 3.500 ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com