குரூப் 2 தேர்வு விடைகுறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம்- டிஎன்பிஎஸ்சி

தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களுக்குள் வௌியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி
Published on

மொத்தம் 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதற்கு மறுப்பு தெரிவித்த டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், குரூப் 2 தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது.

தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களுக்குள் வௌியிடப்படும்.

விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com