திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவருக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்- ஒருவர் கைது

திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவரை பீட் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் வரதராஜன் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இந்த நிலையில் குமார் நேற்று மணவாள நகரில் இருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மணவாளநகர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 32) என்பவர் ஆட்டோவை நிறுத்துமாறு கூறி உள்ளார். அவர் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த சரவணன் கல்லை எடுத்து ஆட்டோ கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி பின்னர் அருகில் இருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். 

இதில் காயம் அடைந்த குமார் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com