திருவள்ளூர் அருகே மின்கசிவால் தீ விபத்து: வீட்டுக்குள் புகை முட்டத்தில் சிக்கி 80 வயது முதியவர் பலி

மின்சார சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் எரிந்து வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது.புகைமூட்டத்தில் சிக்கிய பாலையா சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டனர்.
திருவள்ளூர் அருகே மின்கசிவால் தீ விபத்து: வீட்டுக்குள் புகை முட்டத்தில் சிக்கி 80 வயது முதியவர் பலி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த பன்னூர் தோமையர் தெருவை சேர்ந்தவர் பாலையா (வயது80). தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் மின் கசிவால் தீப்பிடித்தது. இதின் மின்சார சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் எரிந்து வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய பாலையாவால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அவர் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்து விழுந்தார்.

இதற்கிடையே பாலையாவின் வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பேரம்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புகைமூட்டத்தில் சிக்கிய பாலையா சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டனர்.

மப்பேடு போலீசார் பாலையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் புகை மூட்டத்தில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com