திருவள்ளூர் அருகே தீராத வயிற்றுவலியால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர், பழைய சிறுவானூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது29).இவர் ஆட்டோ டிரைவர் ஆவார்.இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (28) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.இந்தநிலையில் உதயகுமார் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதற்காக அவர் பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் இதுநாள் வரையிலும் வயிற்றுவலி குணமாகவில்லை. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது.இதன் காரணமாக அவர் தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன் அறைக்குச் சென்று அங்கு மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இறந்த உதயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது சம்பந்தமாக மேலும் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com