திருக்கழுக்குன்றம் "ஜமாபந்தி" 2.7கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள்- அன்பரசன் வழங்கினார்

திருக்கழுக்குன்றம் தாலுகாவில் ஜமாபந்தி வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது.பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருக்கழுக்குன்றம் "ஜமாபந்தி" 2.7கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள்- அன்பரசன் வழங்கினார்
Published on

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் தாலுகாவில் "ஜமாபந்தி" வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் 857 பேருக்கு, 2.07, கோடி ரூபாய் மதிப்பு, இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாடு, வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ பாபு, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com