கிண்டி தனியார் தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது

கிண்டி தனியார் தங்கும் விடுதியில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

சென்னைபெருநகரில், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைகண்டு பிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், குற்றவாளிளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின்பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம்பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள்கடத்தல், போக்சோமற்றும் பாலியல் குற்றங்க ளில்ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக ஜெ-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று ஆலந்தூர், எம்.கே. என்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்த போது, அங்கு உரிமம் பெறாமல் நாட்டுதுப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் பிடிபட்டநபர்கள் தென்காசி மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த மாரிச்செல்வம், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சின்னத்துறை, விருதுநகர் மாவட்டம் நன்மங்கலத்தை சேர்ந்த சாம்ராஜ் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1 நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் குற்றவாளி மாரிச்செல்வன் தனது நண்பரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை வாங்கிவந்ததும், இவர் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை மற்றும்கஞ்சா வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com