திருப்பூரில் நூல் விலை மீண்டும் ரூ.40 உயர்வு- ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி

நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது.
நூல் விலை
நூல் விலை
Published on

திருப்பூர்:

திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில் துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள்.

நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் திருப்பூரில் நடந்தது. இருப்பினும் மாதந்தோறும் நூல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான(மே) நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.40 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com