

சென்னை:
திருவேற்காடு நகராட்சி ஆணையர் எச். ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூய்மை இந்தியா திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு 22,291 குடியிருப்புகளும், 89,164 மக்கள்தொகையும் கொண்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிடம் இல்லாத வீடுகளை கணக்கெடுப்பு செய்து தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொதுக்கழிப்பிடம் 1-ம் சமுதாய கழிப்பிடங்கள் 10-ம் நகராட்சியில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.
நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி நிர்வாகத்திடமும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கழிவறைகள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவறைகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றும், திறந்தவெளி கழிப்பிடமாக எந்த பகுதியும் பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நகர் நல் சங்க நிர்வாகிகளிடருந்தும் பொதுமக்களின் பிரதிநிதிகளிடமிருந்தும் மற்றும் பொதுமக்களிடமிருந்து உறுதிமொழி கடிதங்கள் பெறப்பட்டுள்ளன.
நகராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகள் அடங்கிய அனைத்து பகுதிகளையும் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதிகளாகவும் 100 சதவீதம் கழிப்பிடம் பயன்பாடு உள்ளதாகவும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.