திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய இரா.காமராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு

திருவாரூரில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இரா.காமராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கு
வழக்கு
Published on

திருவாரூர்:

திருவாரூரில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி அதிமுகவினர் மீது திருவாரூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தியானபுரம் ரவி, திருவாரூர் செல்லப்பா உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் கொரோனா நோய்த்தொற்று பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com