பெண் கொலையில்- தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர்.சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
பெண் கொலையில்- தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
Published on

காஞ்சிபுரம்:

பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி பார்வதி (வயது66). கடந்த 7.12.2018-ம் ஆண்டு திருப்புட்குழி ஏரிக்கரை அருகில் உள்ள நிலத்தில் பார்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். அதில், சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com