ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்- திருநின்றவூரில் வாலிபர் கைது

பெரம்பூரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பெரம்பூர்:

வடசென்னை பகுதியில் போதை பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு, நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆர். கே. நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரிடம் விசாரித்த போது திருநின்றவூரை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் எண்ணிற்கு கூகுள் பேயில் பணம் அனுப்பினால் கூரியர் மூலம் போதை மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து போதை மாத்திரை விற்பனை செய்யும் நபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போதை மாத்திரைகளை சப்ளை செய்தது திருநின்றவூர், கார்டன் பகுதியை சேர்ந்த வடிவு நாதன் (36) என்பது தெரியவந்தது.

அவரை இன்ஸ்பெக்டர் ரவி, சப்இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீஸ்காரர்கள் வெங்கடேசன், மணிகண்டன், தமிழ்வாணன் ஆகியோர் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த சுமார் 2500க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

கைதான வடிவு நாதன் வடசென்னை முழுவதும் போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் தொடர்பில் உள்ள போதை மாத்திரை கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com