திருமுல்லைவாயலில் மோட்டார் சைக்கிள் திருட்டில் பெண் கைது -நண்பரும் சிக்கினார்

திருமுல்லைவாயலில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஆவடி:

திருமுல்லைவாயலில் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மகேஷ். ஐ.டி.ஊழியர். அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது அண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ராதா, அவரது நண்பரான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com