திருமழிசை அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி- வாலிபர் கைது

திருமழிசை அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பூந்தமல்லி அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் மணிகண்டன். செம்பரம்பாக்கம் அடுத்த பாப்பன்சத்திரத்தில் கடை வைத்துள்ளார். இவர் நேற்று மதியம் திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம வாலிபர் மணிகண்டனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.1000-த்தை பறித்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து மணிகண்டன் வெள்ளவேடு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட உட்கோட்டை பகுதியைச் சேர்ந்த அஜித்தை (29) கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com