பேசின்பாலம் அருகில் வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு- 3 பேர் கைது

ரெயிலில் ஏறி விக்னேசை தாக்கி அவர் கையில் வைத்திருந்த ஐபோனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.விக்னேஷ் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
பேசின்பாலம் அருகில் வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு- 3 பேர் கைது
Published on

சென்னை:

சென்னை கொரட்டூர் வாகைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய் விக்னேஷ். இவர் ஆந்திர மாநிலம் தெனாலிக்கு சென்றுவிட்டு ரெயிலில் சென்னை திரும்பினார். ரெயில் கொருக்குப்பேட்டைக்கும், பேசின் பிரிட்ஜ்க்கும் இடையே மெதுவாக சென்றபோது 3 பேர் ரெயிலில் ஏறி விக்னேசை தாக்கி அவர் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து விக்னேஷ் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் எம்.கே.பி. நகர் மீனாம்பாள் சாலை தரைப்பாலத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்தனர். விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டை போகராஜன் நகரை சேர்ந்த சார்லஸ் (21), கார்த்தி என்கிற காந்தி (20), அசோக்குமார் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com