search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக வாழ்வுரிமை கட்சி 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்: சென்னையில் வேல்முருகன் பங்கேற்கிறார்
    X

    தமிழக வாழ்வுரிமை கட்சி 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்: சென்னையில் வேல்முருகன் பங்கேற்கிறார்

    • சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ரவிராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், வர்த்தக பிரிவு இரா.சிவக்குமார் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    சென்னை:

    சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்) மாவட்டம் தோறும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ரவிராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், வர்த்தக பிரிவு இரா.சிவக்குமார் உள்பட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணு கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வகுப்புவாரி பிரதிநிதித்துவம், விகிதாச்சார உரிமை, இடஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சமூக நீதி தான் ஜனநாயகத்தின் ஆணி வேர். இந்த சமூகநீதியை நிலை நிறுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்பதை தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதை உடனே செயல்படுத்தக்கோரி வருகிற 16-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறுகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். நான் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்.

    இவ்வாறு சத்ரியன் து.வெ.வேணுகோபால் அறிக்கையில் கூறி உள்ளார்.

    Next Story
    ×